Saturday 3 March 2012

என்னைப் பற்றி


 சில வரிகள்...
நான் மதுரை மாவட்டம், சோழவந்தான் ஊரில் பிறந்து, வளர்ந்து பள்ளிப் பருவம் முடித்தது அரசு தொடக்கப்பள்ளி, மந்தைக்களம் மற்றும்  போர்டு உயர் நிலைப்பள்ளி, ஆலங்கொட்டாரம், சோழவந்தான்.(தற்பொழுது அரசஞ் சண்முகனார் உயர்நிலைப் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது). என் தந்தை C.கன்னியப்பன், தாயார் சந்திரா அம்மாள் ஆவார்கள். என் தந்தை எங்கள் வட்டாரத்தில் ‘கன்ட்ரோல்’ கன்னியப்ப முதலியார் என்ற நற்பெயர் பெற்ற பெருந்தகை ஆவார்.  
என் உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் மதிப்பிற்குரிய புலவர். கு.குருநாதன், இராசகோபாலன், சச்சிதானந்தம் ஆகிய தமிழாசியர்களிடம் தமிழ் கற்றேன்.
நான் தமிழ்நாடு மருத்துவப் பணியில் 32 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றேன். சுமார் 26 வருடங்கள் கண் மருத்துவ நிபுணராகவும், கண் மருத்துவப் பேராசிரியராக 9 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உண்டு. 
கடந்த பிப்ரவரி 2011 லிருந்து 'கீற்று' வலைத்தளத்தில் தமிழில் சுமார் 50  கட்டுரைகள் - பொது, மருத்துவம், வரலாறு, இலக்கியம் - வெளியிட்டிருக்கிறேன்.
'எழுத்து' வலைத்தளத்தில் சூன், 2011 லிருந்து சுமார் 300 கவிதைகள் பல்வேறு கருத்துக்களில் வெளியிட்டிருக்கிறேன்.
poemhunter.com ல் செப்டம்பர் 2011 லிருந்து சுமார் 142 கவிதைகளும் வெளியிட்டிருக்கிறேன். 
 இவற்றுள் ஆங்கில மொழிபெயர்ப்பாக சுமார் 30 திருக்குறளும், நான்மணிக் கடிகை (9), நாலடியார் (4) வெண்பாக்கள், திரிகடுகம் (2) செய்யுட்களும் அடக்கம்.   

2 comments:

  1. அன்பின் கன்னியப்பன் அண்ணே - அருமையான அறிமுகம் - மருத்துவத் துறையில் பணியாற்றி பணி நிறைவு செய்தமை குறித்து மகிழ்ச்சி - மருத்துவத் துறையில் இருந்தும் தமிழில் ஆர்வம் கொண்டு கீற்று மற்றும் எழுத்து போன்ற தளங்களீல் எழுதி வருவது - ஆங்கிலத்தில் குறளின் மொழி பெயர்ப்பு - நான்மணிக் கடிகை, நாலடியார், வெண்பாக்கள், மற்றும் திரிகடுகம் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது பாராட்டுக்குரியது. மதுரையில் வசிக்கிறீர்களா ? தொடர்பு கொள்ளலாமே ! நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா - 9840624293

    ReplyDelete
  2. அன்புள்ள சீனா,
    வாழ்த்துகளுக்கு நன்றி. நான் மதுரை விளாங்குடியில் கடந்த 20 ஆண்டுகளாக வசிக்கிறேன். என் கல்லூரி நண்பர் சாம் (தருமி) வலைப்பதிவிற்கு அறிமுகப் படுத்தினார். உங்கள் இருப்பிடம் எது? உங்களைப் பற்றி அறிமுகம்? பேசலாம். 9843070840
    வ.க.கன்னியப்பன்.

    ReplyDelete