Sunday 25 March 2012

பாத்திமா கல்லூரிக்கருகில்... போக்குவரத்து சிக்கல்களை சீரமைக்க சில யோசனைகள் - பலனளிக்குமா?

பாத்திமா கல்லூரிக்கருகில் உள்ள போக்குவரத்து சிக்கல்களை, தருமி என்ற நண்பர் சாம், வலைப்பூவில் தெரிவித்திருந்தார். பாத்திமா கல்லூரிக்கருகில் உள்ள போக்குவரத்து திட்டுக்கள் (Traffic islands) வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிகுந்த சவாலாகவே உள்ளன. எந்த வாகன ஓட்டுனர்களும், நடந்து செல்பவர்களும் எந்த ஒழுங்கு முறையும் கடைப்பிடிப்பதில்லை. மிகவும் குழப்பமாகவும், தன்னிச்சையாகவும் செல்கின்றனர். பல விபத்துக்களும் ஏற்படுகின்றன. கண்டிப்பாக இதை சரி செய்ய இயலுமென்றே நினைக்கிறேன். போக்குவரத்து காவல் துறை ஒரு சில மாற்றங்களை செய்ய சில வழிமுறைகளை யோசனைக்கு வைக்கிறேன்.

அந்த இடத்தில் இரண்டு திட்டுக்கள் உள்ளன. ஆலமரம் பஸ் நிறுத்தத்திலிருந்து வரும்பொழுது முதலில் உள்ள சிலையில்லாத சிறிய முதல் திட்டு. இந்த இடத்தில் இடது புறமாகவே சென்று வைகைப் பாலம் வழியாக காளவாசல் செல்வதில் எந்த குழப்பமுமில்லை.

ஆலமரம் பஸ் நிறுத்தத்திலிருந்து வந்து பாத்திமா கல்லூரி வழியாக சமயநல்லூர் வழி செல்லும் வாகனங்கள் முதல் திட்டிலேயே இடது புறமாக சுற்றி பிரதான சாலையில் சேர்ந்து கொள்ளுதல். இதற்கு மாருதி showroom ஐ அடுத்து  (கொய்யா பழக்கடை இருக்கிறது) சிக்னல் அமைக்கலாம். 

அடுத்து காளவாசல் பகுதியிலிருந்து வந்து ஆலமரம் நிறுத்தம் வழியாக பாலமேடு, கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள் முதல் திட்டிலேயே இடதுபுறமாக சுற்றி பாத்திமா கல்லூரி காம்பவுண்டை ஒட்டி சேர்ந்து கொள்ளுதல். இதற்கு SUZUKI Arun motors க்கு முன்னால் சிக்னல் அமைக்கலாம். (இந்த வாகனங்கள் தற்சமயம் இன்னும் சற்று தூரம் வந்து சிலைகள் உள்ள பெரிய இரண்டாவது திட்டைச் சுற்றி, திரும்ப மிகுந்த சிரமப்பட்டு செல்கின்றன).

சமயநல்லூர் வழியாக வரும் வாகனங்கள் இடது புறமாக சென்று ஆலமரம் நிறுத்தம் வழி செல்லலாம். நேர்வழியாக காளவாசலும் செல்லலாம். இதற்கு பாத்திமா கல்லூரியை அடுத்து இடதுபுறம் காம்பவுண்ட் அருகில் சிக்னல் அமைக்கலாம். 

என் யோசனைகள் பலனளிக்குமா?

2 comments:

  1. //..முதலில் உள்ள சிலையில்லாத சிறிய முதல் திட்டு.// - இதை நீக்குவது இன்னும் கொஞ்சம் வசதி தரும்.

    //அடுத்து காளவாசல் பகுதியிலிருந்து வந்து ஆலமரம் நிறுத்தம் வழியாக பாலமேடு, கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள்..// - இதை முறைப்படுத்துவது மிகச் சிரமம் என நினைக்கிறேன். இப்போதே அப்பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் வலது பக்கம் முழுமையாக வந்து பின் திரும்புகிறார்கள்.

    ReplyDelete