எழுத்து.காம் ல் 16.09.2011 தேதியில் வெளியிட்ட என் கவிதை
திரும்பி விட்டார்கள்
பள்ளியிலிருந்து பிள்ளைகள்
பேரப் பிள்ளைகள்;
பசியாற சாதமுடன்
முட்டைப் பொரியல் அல்லது
நூடுல்ஸ்;
தாத்தாவிற்கும் வேண்டும், தா! என்று
செல்லங்களிடம் கேட்பேன் வேண்டுமென்றே!
தரமாட்டார்கள்;
மீண்டும் மீண்டும் கேட்பேன்,
என்னிடம் தயங்கியபடி கேட்டார்கள்
ஒரு கேள்வி!
இரவினில் நீங்கள் அருந்தும்
பானத்தை 'என்றாவது' கேட்டோமா
நாங்கள்?
கவனம்!!
குழந்தைகள் நம்மையும்
கவனித்துக் கொண்டுதான்...
இருக்கிறார்கள்.
மேக கன்னிகா, குருபிரசாத் |
திரும்பி விட்டார்கள்
பள்ளியிலிருந்து பிள்ளைகள்
பேரப் பிள்ளைகள்;
பசியாற சாதமுடன்
முட்டைப் பொரியல் அல்லது
நூடுல்ஸ்;
தாத்தாவிற்கும் வேண்டும், தா! என்று
செல்லங்களிடம் கேட்பேன் வேண்டுமென்றே!
தரமாட்டார்கள்;
மீண்டும் மீண்டும் கேட்பேன்,
என்னிடம் தயங்கியபடி கேட்டார்கள்
ஒரு கேள்வி!
இரவினில் நீங்கள் அருந்தும்
பானத்தை 'என்றாவது' கேட்டோமா
நாங்கள்?
கவனம்!!
குழந்தைகள் நம்மையும்
கவனித்துக் கொண்டுதான்...
இருக்கிறார்கள்.
சரி ... அவங்க கேட்கலை!
ReplyDeleteநாளைக்கு எத்தனை மணிக்கு ..?
அன்புள்ள தருமி,
ReplyDeleteநான் தினமும் மது அருந்துபவன் இல்லை. அபூர்வமாக வருடம் ஒருமுறை நடைபெறும் எங்கள் துறை சம்பந்தமான மாநாடுகளின் போதும், நான் சியாட்டில், யு.எஸ் (2002), ரெட்டிங் (Reading)லண்டன் 2006 சென்றிருந்த போதும் சிவப்பு ஒயின் அருந்துவதுண்டு. இதில் Omega 3 fatty acids இருப்பதால் இதயத்திற்கு நல்லது எனப்படுகிறது. எனவே இக்கவிதை கற்பனையில் புனையப்பட்டதே.